

பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான ராக் பேண்ட் இசைக்குழு மற்றும் சில தாலிபான்களின் ஃபேஸ்புக் பக்கங்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
இதனை பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை அதிகாரி உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சில குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்குகள் அரசை பங்கப்படுத்தும் வகையிலும், நாட்டி இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது. அந்த பக்கங்கள் மீது தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் அவைகளில் சில முடக்கப்பட்டுள்ளன" என்றார்.
பாகிஸ்தானி மீம், தாலிபான்களின் சில பக்கங்கள் முடக்கப்பட்டதும் அல்லாமல் இளைஞர்கள் சிலர் சேர்ந்து நடத்திவரும் ராக் பேண்ட் இசைக்குழுவின் ஃபேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முடக்கங்கள் குறித்து எந்த தகவல்களையும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களிடம் அறிவிக்கவில்லை என்று ராக் பேண்ட் இசைக் குழு புகார் தெரிவித்துள்ளது.