பிரிட்டனில் பரவும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிரிட்டனில் பரவும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Updated on
1 min read

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் 20 ஆம் தேதி பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை கரோனா வைரஸ் தற்போது 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களும் வேகமாக பரவுத் தன்மை கொண்டதாகவே உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் 44 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 15 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனிலிருந்து பரவும் உருமாற்றம் அடைந்த உலகம் முழுவதும் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் பேராசிரியர் ஷரோன் பீகாக் கூறும்போது, “ பிரிட்டனில் பரவிய உருமாற்றம் அடைந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை எற்படுத்தும். இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் விரைவில் பரவக் கூடியது மேலும் இவை வேகமாக உருமாற்றம் அடைகின்றன. இதன் காரணமாக கரோனா தடுப்பு மருந்துகள் தாக்கம் பாதிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in