சவுதியின் பெண் செயற்பாட்டாளர் மூன்று ஆண்டுகளுக்குபின் விடுதலை

சவுதியின் பெண் செயற்பாட்டாளர் மூன்று ஆண்டுகளுக்குபின் விடுதலை
Updated on
1 min read

சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டளாரான லூஜின் அல் ஹத்லால் 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

லூஜின் அல் ஹத்லால் சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல்கள் வலுவாக எழுந்தன.

இந்த நிலையில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனைகளுக்குப் பிறகு லூஜின் விடுதலை செய்யபட்டிருக்கிறார்.

இதனை அவரது சகோதரி லினா அல் ஹத்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், லூஜின் வீட்டி இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.அவரது விடுதலை குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

ஆனால், சவுதி அரேபியின் இளவரசர் வந்த முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும் லூஜின் அல் ஹத்லால் மீதான இந்த நடவடிக்கை காரணமாக சவுதி அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in