

இலங்கையின் திரிகோணமலை கடற்படை தளத்தில் பூமிக்கடியில் ரகசிய சிறைக்கூடம் ஒன்றை ஐ.நா. குழு கண்டறிந்துள்ளது. இலங்கை யில் இறுதிக்கட்ட போருக்கு பின்னர் கைது செய்யப்பட்ட வர்கள் இங்கு விசாரணை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டிருக் கலாம் என்று அக்குழு தெரிவிக் கிறது. ஆனால் இலங்கை கடற்படை இதனை மறுத்துள்ளது.
ஐ.நா. குழுவில் இடம்பெற் றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் பயணத்தின்போது கிழக்கு மாகாணம், திரிகோண மலை மாவட்டத்தில் கடற்படை தளம் ஒன்றில் பூமிக்கடியில் ரகசிய சிறைக்கூடம் ஒன்றை கண்டறிந்தோம். இலங்கை இறுதிக்கட்ட போருக்கு பின் பிடிக் கப்பட்டவர்கள் இங்கு விசா ரணை மற்றும் சித்திரவதை செய் யப்பட்டிருக்கலாம். அதற்கான அடையாளங்கள் அங்கு காணப் படுகின்றன. இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. இதுகுறித்து முறை யாக விசாரிக்கப்பட வேண்டும். இங்கு ஏராளமானோர் அடைக்கப் பட்டிருக்கலாம். இதுபோல் மேலும் பல்வேறு சிறைக்கூடங்கள் இயங்கி வந்திருக்கலாம் என நம்புகிறோம். இவ்வாறு துலிட்ஸ்கி கூறினார்.
இக்குழுவினர் தங்கள் இறுதி அறிக்கையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன் சில் கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.