பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, “ கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் 20 ஆம் தேதி பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை கரோனா வைரஸ் தற்போது 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களும் வேகமாக பரவுத் தன்மை கொண்டதாகவே உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் 44 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 15 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸின் உருமாற்றம் அச்சம் தரவில்லை என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அச்சம் தருவதாக் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in