Published : 10 Feb 2021 01:43 PM
Last Updated : 10 Feb 2021 01:43 PM

 வரதட்சணைக்கு எதிராக பாகிஸ்தானில்  விழிப்புணர்வு பிரச்சாரம்

வரதட்சணை முறைக்கு எதிராக பாகிஸ்தானில் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் அலி சிஷன் என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் அந்நாட்டில் நிலவும் வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணவு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

மணமகள் தனது திருமணத்தின்போது அளிக்கப்பட்ட வரதட்சணைகளை வண்டியில் ஏற்றி கொண்டு அதில் மணமகன் அமர்திருக்க அதனை தள்ளி செல்கிறார்.

இந்தக் காட்சி இடம்பெற்ற புகைப்படத்தை அலி சிஷன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது.

இப்புகைப்படத்தை பாகிஸ்தானின் ஐ. நா. பக்கமும் வெளியிட்டு, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் பலரும் அப்புகைக்கபடத்தை பதிவிட்டு #StopDowryMongering என்று டிரெண்ட் செய்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x