

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை, காஸா பகுதிகளுக்கான ஒருங் கிணைந்த அரசு திங்கள்கிழமை பொறுப்பேற்றது. பாலஸ்தீனப் பகுதிகளான மேற்குக்கரை, காஸா ஆகியவை கடந்த 7 ஆண்டுகளாக தனித் தனி நிர்வாகங்களின் கீழ் இருந்தன.
காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பும், மேற்குக்கரை பகுதியில் அதிபர் மெஹ்மூத் அப்பாஸின் பதாஹ் கட்சியும் ஆட்சி நடத்தி வந்தன. இந்த இரு நிர்வாகங்களும் தொடர்ந்து பேச்சு நடத்தியதன் விளைவாக கடந்த ஏப்ரல் மாதம், ஒருங்கிணைந்த அரசை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாலஸ்தீனத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் உள்ளடக்கிய பிரதமராக ரமி ஹம்தல்லா திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 13 அமைச்சர் களும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், காஸா பகுதியிலி ருந்து அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 4 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வில்லை. அவர்களை பதவியேற்பு விழா நடைபெற்ற மேற்குக்கரை நகரான ரமல்லாவுக்குச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அனுமதிக் கவில்லை. காஸாவுக் கும் மேற்குக் கரைக்கும் இடைப் பட்ட பகுதியை இஸ்ரேல் அரசு நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.