சீனாவுடனான பிரச்சினை எதிரொலி: நவீன போர் விமானங்களை வாங்கியது பிலிப்பைன்ஸ்

சீனாவுடனான பிரச்சினை எதிரொலி: நவீன போர் விமானங்களை வாங்கியது பிலிப்பைன்ஸ்
Updated on
1 min read

சீனாவுடனான கடல் எல்லை பிரச்சினை காரணமாக, நிதி நெருக்கடிக்கு நடுவிலும் பிலிப்பைன்ஸ் ராணுவம் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக 2 அதிநவீன போர் விமானங்களை வாங்கி உள்ளது.

தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட இந்த எப்ஏ-50 ரக விமானங்கள், ஏஞ்சலிஸ் சிட்டியில் உள்ள கிளார்க் விமானப்படை தளத்துக்கு (முன்பு அமெரிக்க விமானப்படை தளமாக இருந்தது) நேற்று வந்தன. அந்த விமானங்களுக்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து, பாரம்பரிய முறைப்படி அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மொத்தம் 12 விமானங்களை ரூ.2,613 கோடிக்கு வாங்க, கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பயிற்சி விமானமான இதை பிலிப்பைன்ஸ் ராணுவம் தங்கள் தேவைக்கேற்ப பல்நோக்கு போர் விமானமாக மாற்றிக்கொள்ளும். மற்ற விமானங்கள் படிப்படியாக 2017-ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும்.

பிலிப்பைன்ஸ் ராணுவத்திடம் இருந்த எப்-5 போர் விமானம் கடந்த 2005-ம் ஆண்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு நிதிநெருக்கடி காரணமாக போர் விமானங்கள் வாங்கப்படவில்லை.

இப்போது தென் சீன கடல் எல்லை தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் பெனிக்னோ அக்வினோ ராணுவத்தை பலப்படுத்த முடிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in