

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, துபாய் மெட்ரோ ரயலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி ராபின் என்ற பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாந்தி ராபின் (54). கடந்த 22 ஆண்டுகளாக துபாயில் உள்ள அரபு குடும்பத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.
அவர் தனது பணிகளை முடித்த பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது நண்பர் களைச் சந்திக்க துபாய் மெட்ரோ ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத் துவார். இதற்காக, அவருக்கு வழங்கப்பட்ட நம்பர் ஒன் அட்டை யில் பரிசுப்புள்ளிகள் கிடைத்தன.
இந்நிலையில், பொதுப் போக்குவரத்து தின வாரத்தை துபாய் சாலைப் போக்குவரத்து துறை அறிவித்திருந்தது. இதன் ஒருபகுதியாக பொதுப்போக்கு வரத்தை அதிகம் பயன்படுத்தி யதற்காக சாந்தி ராபினுக்கு 50 கிராம் தங்கத்தை சாலைப் போக்குவரத்துத் துறை பரிசாக வழங்கியுள்ளது. இதுதொடர் பாக சாந்தி கூறும் போது, “மெட்ரோவில் பயணம் செய்ததற் காக 50 கிராம் தங்கம் கிடைத்தது இறைவனின் அருள்” எனத் தெரிவித்துள்ளார்.