

பாகிஸ்தானில் நவம்பர் மாதத்துக்குப் பிறகு கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நவம்பர் இரண்டாம் தேதிக்குப் பிறகு கரோனா தொற்று நேற்றுதான் பாகிஸ்தானில் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கரோனா தொற்று சதவீதம் பாகிஸ்தானில் 3.1 சதவீதமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரோனா தடுப்பு மருந்துகள் சுகாதாரப் பணியாளர்களுக்குச் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவுக்கு 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.