

லிபியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டுக்கான ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையக செய்திப் பிரிவு செயலாளர் பீட்டர் குக் கூறியதாவது:
லிபியாவில் தீவிரவாதி அபு நபிலுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ‘யுஎஸ் எப்-15’ போர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் அவர் கொல்லப்பட்டார். விசாம் நஜ் அப் ஜைத் அல்-ஜுபைதி என்ற பெயரிலும் அழைக்கப்படும் நபில் அல்காய்தா அமைப்பில் நீண்டகாலம் இருந்தார். இராக்கைச் சேர்ந்த இவர் பின்னர் லிபியாவுக்கான ஐஎஸ் தலைவராக பொறுப்பேற்றார்.
நபில் கொல்லப்பட்டதன் மூலம் லிபியாவில் புதிய உறுப்பினர் களை சேர்ப்பது, அமெரிக்கா மீது வெளியிலிருந்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட ஐஎஸ் அமைப்பின் நோக்கங்கள் நிறை வேறாது. இனி ஐஎஸ் முக்கிய தலைவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐஎஸ் அமைப்பில் தண்ட னையை நிறைவேற்றி வந்த ஜிஹாதி ஜான் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட சில தினங்களில் நபில் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் பாரீஸ் நகரில் 129 பேரை பலி கொண்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித் துள்ளது.