Published : 28 Jan 2021 07:16 am

Updated : 28 Jan 2021 07:39 am

 

Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:39 AM

ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் வாழ்க்கை துணைக்கு வேலை: ட்ரம்ப் தடையை நீக்கினார் பைடன்

h1b-visa
பைடன்

மும்பை

அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவன் / அல்லது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2019-ல் அப்போதைய அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க பல்வேறு விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அதன்படி வெளிநாட்டினரில் ஹெச்1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவிக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான உரிமையை வழங்கும் ஹெச்4 விசா திட்டத்தை தடை செய்ய உத்தரவிட்டார்.


இந்தத் தடையை சட்டப்பூர்வமாக்க ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக இருந்தது. இதற்கான முயற்சிகள் இறுதிக் கட்டத்தில் இருந்த நிலையில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற நிலையில், ட்ரம்ப் கொண்டு வந்த ஹெச்4 விசாவுக்கான தடை முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பைடன் நிர்வாகம். இதன்மூலம் ஹெச்1பி விசாதாரர்களின் இணையர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, ‘‘ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த ஹெச்4 விசா தடையால் திறமையான டாக்டர்கள், இன்ஜினீயர்கள் போன்ற பலரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியானது. குறிப்பாக பெண்கள். கடந்த ஆண்டே ஹெச்4 விசா தடையை ரத்து செய்யுமாறு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் போராடினோம். தற்போது புதிய அரசு பொறுப்பேற்று தடை நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது’’ என்றார்.


ஹெச்1பி விசாவாழ்க்கை துணைக்கு வேலைட்ரம்ப்பைடன்H1B visa

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x