

அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் வரும் 29-ம் தேதி கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறவுள்ளது.
இக்கோயில் 1977-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 18 மாதங்களாக கோயிலை விரிவுபடுத்தும் திருப்பணி நடைபெற்று வருகின்றன. இதற்காக 1.5 மில்லியன் டாலர்கள் செலவில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி பத்மஸ்ரீ முத்தயா ஸ்தபதியின் ஆலோசனைக்கு உட்பட்டு இந்த திருப்பணிகள் நடைபெறுகின்றன.
மகாலட்சுமிக்கு புது கர்ப்பக்கிரகம் மற்றும் விமானம், புதிய கான் கிரீட் மேற்கூரை, மீனாட்சி சுந்தரேஸரர், பாலாஜி மற்றும் பத்மாவதி பிரகாரங்களை சுற்ற வசதி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.