

ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் பிராட்பேண்ட் சேவை களுக்கு பயன்படும் வகை யிலான தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா நேற்று வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது.
‘சைனாசாட்2சி’ என்ற பெயரி லான இந்த செயற்கைக்கோள் அந்நாட்டின் தென்மேற்கில் உள்ள சிசாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து ஏவப் பட்டது. லாங் மார்ச் 3பி கேரியர் ராக்கெட் இதனை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.
சீனா முழுவதும் வானொலி ஒலிபரப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, பிராட்பேண்ட் சேவை, கேபிள் நெட்வொர்க் ஆகியவற்றுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும் என ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.