

அமெரிக்க வாழ் இந்தியரான ரஜத் குப்தாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து வரும் 17-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவ னத்தின் முன்னாள் இயக்குநர் ரஜத் குப்தா, அந்நிறுவனம் தொடர்பான ரகசிய தகவல்களை தனது நண்பர் ராஜ் ராஜரத்தினத்திடம் தெரிவித்தார்.
அதன் மூலம் ராஜரத்தினம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றதாகவும், இதில் ரஜக் குப்தா ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் குப்தாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்ட னையும், 50 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி அவரை ஜூன் 17-ம் தேதி சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனது வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த ஏப்ரலில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரஜத் குப்தா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. ஆனால், அவருக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புப்
படி வரும் 17-ம் தேதி அவர் சிறையில் ஆஜராக வேண்டி யுள்ளது. அதைத் தவிர்க்க உச்சநீதிமன்றத்தில் ரஜத் குப்தா மனு தாக்கல் செய்தார். அதில், மறுவிசாரணை நடத்த வலியுறுத்தி மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும், அது தொடர்பான தீர்ப்பு வெளியாகும்வரை ஜாமீனில் வெளியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று ரஜத் குப்தா கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஜத் குப்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து வரும் 17-ம் தேதி சிறைக்குச் செல்ல வேண்டிய நெருக்கடியான நிலை ரஜத் குப்தாவிற்கு ஏற்பட்டுள்ளது.