பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Updated on
1 min read

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்குப் பகுதியில் ஃபின்ஷாஃப் நகரத்தில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 29.3 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை. எனினும், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவின் போர்கோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 67 பேர் பலியாகினர். 500 பேர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ரிங் ஆஃப் பயர்

பசிபிக் கடலில் அமைந்துள்ள ரிங் ஆஃப் பயர் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால் நிலநடுக்கம் அதிகம் உணரப்படும் நாடாக அறியப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in