

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை களைக் குறிவைத்து தலிபான்கள் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர். வெடிப்பொருள் நிரப்பிய காரை மோதச் செய்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
காபூல் நகரின் ஜாய்சிர் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, குண்டுஸ் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் தலிபான் தீவிரவாதி களுக்குக் கிடைத்த மிகப்பெரு வெற்றியாக இது கருதப்படுகிறது.
குண்டுஸ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கார்வெடி குண்டுத் தாக்குதலை மேற் கொண்டதாக தலிபான்கள் தெரிவித் துள்ளனர்.