இந்தோனேசியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்: சீனாவுடன் ரூ.35,750 கோடிக்கு ஒப்பந்தம்

இந்தோனேசியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்: சீனாவுடன் ரூ.35,750 கோடிக்கு ஒப்பந்தம்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சீன ரயில்வே இன்டர்நேஷனல் கோ லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.35,750 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாடுகளில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த சீனா ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அந்த நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் முதல்முறையாக இந்தோனேசியாவில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தம் சீனாவுக்கு கிடைத் துள்ளது. இந்தோனேசிய தலை நகர் ஜகார்தாவில் நேற்று முன் தினம் ரூ.35,750 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி தலைநகர் ஜகார்த்தா வில் இருந்து 750 கி.மீட்டர் தொலை வில் உள்ள லாவா பிராந்திய தலை நகர் பான்டங் நகருக்கு சீன ரயில்வே இன்டர்நேஷனல் கோ லிமிடெட் ரயில் பாதை அமைக்கிறது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 250 கி.மீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

தற்போது ஜகார்த்தாவில் இருந்து பான்டங் நகருக்கு இயக் கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் 3 மணியாக உள்ளது. புல்லட் ரயில் சேவை தொடங்கும் போது ஒரு மணி நேரத்தில் பான்டங் நகரைச் சென்றடைய முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in