

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டினா தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், “சான் ஜுவான் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்க அதிர்வுகள் நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும், பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் ரிங் ஆஃப் ஃபயரின் ஒரு பகுதி தென் அமெரிக்க நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதன் காரணமாக அர்ஜென்டினாவும் நில அதிர்வுகளை உள்ளடக்கியுள்ளது.