Last Updated : 17 Jan, 2021 12:48 PM

 

Published : 17 Jan 2021 12:48 PM
Last Updated : 17 Jan 2021 12:48 PM

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; வீடுகள் இடிந்து விழுந்ததால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு: 56 சடலங்கள் மீட்பு

இந்தோனேசியாவில் வெள்ளி இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவில் வெள்ளி இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராடித்யா ஜாதி கூறியதாவது:

இந்தோனேசியாவில் வெள்ளி இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

சாலைகளில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக் கிடந்ததைக் காணமுடிந்தது. இடிபாடுகளில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் சிக்கியவர்களை மீட்க கனகரக உபகரணங்கள் வந்துள்ளன.

800 பேர் காயம்

இந்நிலநடுக்கத்தால் தீவில் வசித்துவந்த ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆகியுள்ளனர். இதில் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் கடுமையான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் மாமுஜுவில் மொத்தம் 47 பேரும், மஜீனில் ஒன்பது பேரும் பலியாகியுள்ளனர். மஜீனில் குறைந்தது 415 வீடுகள் சேதமடைந்துள்ளன, சுமார் 15,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தரைமட்டமான கவர்னர் மாளிகை

கிட்டத்தட்ட 300,000 மக்கள் நிறைந்த மாகாண தலைநகரான மாமுஜு முழுவதும் இடிந்து விழுந்த கட்டிடங்களிலிருந்து குப்பைகளால் நிரம்பியுள்ளது. இங்குள்ள கவர்னர் மாளிகை நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. பிரமாண்ட வணிக வளாகம் ஒன்று நொறுங்கிய நிலையில் பிரமாண்ட குப்பைப் குவியலாகக் காட்சியளிக்கிறது. நகரின் முக்கியமான இரண்டு மருத்துவமனைகள் சேதமடைந்தன.

நிலநடுக்கத்தால் வெள்ளி இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தொலைபேசி தகவல் தொடர்புகளும் சில இடங்களில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட அவசரகால பணிகளால் மீண்டும் மேம்படத் தொடங்கியுள்ளன.

இவ்வாறு தேசிய பேரிடர் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x