

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது 2 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சிரியாவில் அமைந்துள்ள ரஷிய தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து ராக்கெட்டுகள் வந்ததால் சம்பவத்துக்கு அவர்களின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு அளித்தார். தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அங்கு கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தப்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக பேரணி
ரஷியாவின் தாக்குதல் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தது. ஆனால் சிரிய மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கேடயமாக பயன்படுத்துவதாக கூறி ஆதார வீடியோ பதிவுகளை ரஷ்யா வெளியிட்டது.
மேலும், ரஷ்யாவின் தாக்குதல் அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது பஷர் அல் ஆசாத் படைகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது. ரஷியாவின் அதிரடி நடவடிக்கைகளை ஆதரிக்கும் விதமாக சிரியாவில் உள்ள பொதுமக்களுள் சிலர் இன்று டமாஸ்கஸில் உள்ள ரஷ்யா தூதரகத்தில் பேரணி நடத்தினர்.
300க்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்து ரஷ்யாவுக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பியதாக அங்கிருக்கும் புகைப்பட பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.