Published : 08 Jan 2021 16:13 pm

Updated : 08 Jan 2021 16:13 pm

 

Published : 08 Jan 2021 04:13 PM
Last Updated : 08 Jan 2021 04:13 PM

பிரேசிலில் கரோனா பலி 2 லட்சத்தை கடந்தது

brazil-corona-update

பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,455 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.


பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தவறவிடாதீர்!



BrazilCoronaCorona virusOne minute newsகரோனாகரோனா வைரஸ்கரோனா தொற்றுபிரேசில்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x