Last Updated : 07 Jan, 2021 11:39 AM

 

Published : 07 Jan 2021 11:39 AM
Last Updated : 07 Jan 2021 11:39 AM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: சர்ச்சைக்குரிய பேச்சால் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோப்புப்படம்

வாஷிங்டன்

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட தன்னுடைய ஆதாரவாளர்களைத் தூண்டிவிடும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டதால், அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு 12 நேரத்துக்கு முடக்கி ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதேபோல, இரு விதிமுறைகளை அதிபர் ட்ரம்ப் மீறியதால் அவரின் ஃபேஸ்புக் கணக்கையும் 24 மணிநேரத்துக்கு முடக்கி ஃபேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது தனது ஆதரவாளர்கள் திரும்பிச் செல்லுமாறும், அமைதியாகக் கலைந்து செல்லுமாரும் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வீடியோக்களில் பேசி பதிவிட்டார். அந்த வீடியோக்களில் அதிபர் ட்ரம்ப், கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தல் மோசடித் தேர்தல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று கூறிவிட்டு, அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று போராட்டத்தை தூண்டிவிடும் வகையில் பேசியிருந்தார்.

இதையடுத்து, அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை 12 மணிநேரத்துக்கு முடக்கி வைத்தும், அதில் பதிவிட்ட சில ட்விட்டர் கருத்துக்களை நீக்க வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் உத்தரவிட்டது. அவ்வாறு அந்த ட்விட்டர் கருத்துக்களை நீக்காவிட்டால், தொடர்ந்து முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ வாஷிங்டன் டிசியில் இதுவரையில்லாத வகையில் வன்முறையான சூழல் காணப்படுகிறது. ஆதலால், அதிபர் ட்ரம்ப் வன்முறை தொடர்பாகவும், போராட்டம் தொடர்பாகவும் இதற்கு முன் ட்விட்டர் பதிவிட்ட 3 கருத்துக்களை நீக்க வேண்டும், பல்வேறு கொள்கை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

இதனால் அடுத்த 12 மணிநேரத்துக்கு அதிபர் ட்ரம்ப் ட்விட்ர் கணக்கு முடக்கப்படுகிறது. இந்த ட்விட்டர் பதிவுகள் நீக்கப்படாவிட்டால், ட்விட்டர் கணக்கு தொடர்ந்து முடக்கப்படும், எதிர்காலத்தில் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் நிரந்தரமாக முடக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிர்வாகமும், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கணக்கை 24 மணிநேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது. அதிபர் ட்ரம்ப் சார்பில் ஃபேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் பதிவிடப்பட்ட வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட வீடியோவில், “ ஆதரவாளர்களே உங்கள் வலியை உணர்கிறேன், உங்கள் மனவேதனையை அறிவேன். தேர்தலில் முடிவைத் திருடிவிட்டார்கள். அதுமிகப்பெரிய தேர்தல் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அமைதியாகக் கலைந்து செல்லுங்கள். அமைதி தேவை. சட்டம் ஒழுங்கை மதித்து நடங்கள். இது மோசடியான தேர்தல், இவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்க முடியாது. அமைதியாச் செல்லுங்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கெய்ரோஸன் கூறுகையில் “ இது மிகவும்அவசரமான சூழல், முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதால், அதிபர் ட்ரம்ப் பேசிய வீடியோ நீக்கப்பட்டது. வாஷிங்டனில் நடந்துவரும் வன்முறையைக் குறைக்க வேண்டும் என்பதால், நடுநிலையுடன் நடந்து, வீடியோவை நீக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x