Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: இலங்கை அரசுக்கு மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்

கொழும்பு

‘‘இலங்கை தமிழர்களின் நியாய மான கோரிக்கைகளும், விருப் பங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச் சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத் தினார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை தலைநகர் கொழும்பு வுக்கு நேற்று வந்தார். சர்வதேச விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் உள்ளிட்ட உயரதி காரிகள் வரவேற்றனர். பிற்பகல் 12 மணியளவில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்தார்.

அப்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு விவகாரங் கள் குறித்தும் இருவரும் ஆலோ சித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவை ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது:

கரோனா தொற்றின் தாக்கமானது இந்தியா – இலங்கை இடையேயான உறவினை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுவடையவே செய்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகள் இடையேயான நல்லுறவில் முக்கிய மைல் கல்லாக விளங்கியது.

தற்போது கரோனா வைரஸுக்கு பிந்தைய ஒத்துழைப்பை பரஸ்பரம் மேம்படுத்தும் நடவடிக்கையில் இரு நாடுகளும் இறங்கியிருக்கின் றன. அதன் ஒருபகுதியாக, இந் தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்துகளை வழங்குமாறு இலங்கை கேட்டுள்ளது. இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

இலங்கையில் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை நீடிக்கச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது. இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா நீண்டகால அடிப் படையில் ஒத்துழைப்பு வழங்கும். அதன்படி, இலங்கையில் சிறு பான்மையினராக இருக்கும் தமிழர்களின் நியாயமான விருப்பங் களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டியது அவ சியம். அதுமட்டுமின்றி, 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவ தையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விரைவில் விடுவிக்கப் பட வேண்டும். இவ்வாறு ஜெய் சங்கர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன பேசும்போது, “கரோனா பெருந்தொற்றால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x