

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத தயாரிப்புக்கான மூலப் பொருட்களை விற்க ரஷ்ய கடத்தல் கும்பல்கள் முயற்சித்ததாகவும், அதனை அமெரிக்க உளவு அமைப் பான எப்பிஐ முறியடித்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத தயாரிப்புக்கான மூலப் பொருட்களை விற்க கடந்த 5 ஆண்டு களில் 4 முறை ரஷ்ய கடத்தல் கும்பல்கள் முயற்சித்துள்ளன.
கடைசியாக கிடைத்த தகவலின் படி கடந்த பிப்ரவரி மாதம் பேரழிவை ஏற்படுத்த உதவும் சீசியம் தனிமத்தை விற்க ஐஎஸ் தீவிர வாதிகளுடன் பேச்சு நடத்தப்பட் டுள்ளது. பல நகரங்களை ஒரே நேரத்தில் அழிக்கும் அளவுக்கு சீசியத்தை அணு ஆயுதமாக பயன்படுத்த முடியும்.
கடத்தல் கும்பலை சேர்ந்த வாலன்டைன் குரோசு என்பவர் 2.5 கோடி டாலருக்கு இந்த சீசியத்தை விற்க ஐஎஸ் தீவிரவாதிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
“இஸ்லாமிய அரசை உரு வாக்கும் முயற்சியில் உள்ள நீங்கள், இந்த தனிமத்தை வைத்து பேரழிவை உருவாக்கும் அணுகுண்டை தயாரிக்க முடியும்” என்று தீவிர வாதிகளின் பிரதிநிதிகளிடம் வாலன்டைன் கிராஸ் கூறியுள்ளார். மால்டோவா நாட்டின் தலைநகர் சிஷினோவில் உள்ள இரவு விடுதி யில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக எப்பிஐ கூறியுள்ளது. வாலன்டைன் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. இது தவிர யுரேனியம் விற்பனை தொடர்பாகவும், பேரழிவு ஆயுத தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை விற்பது தொடர்பாகவும் பேரம் நடத்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பலர் ரகசியமாக கைது செய்யப்பட்டுள்ளனர். எப்பிஐ மற்றும் மால்டோவா விசாரணை அமைப்பினர் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளனர்.
“சட்டவிரோத அணு ஆயுத பொருட்கள் விற்பனையை தடுக்க மால்டோவா அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாடு பல கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எரிக் லுன்ட் கூறியுள்ளார்.