

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, இந்திய மீனவர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தெற்கு சிந்து மாகாண கடற்பகுதியில் சனிக் கிழமை கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கடற்பயண பாது காப்பு படையின் செய்தித் தொடர்பாளர் வாஜித் நவாஸ் நேற்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, “இந்த மீனவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக இவர்கள் கராச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இவர்களின் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
முன்னதாக 100 மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்ததாக தகவல்கள் வெளியாயின.
மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாக இருநாடுகளும் அவர்களை அவ்வப்போது கைது செய்து வருகின்றன.