

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்து முதன்முதலாக பிரிட்டனைச் சேர்ந்த 82 வயதான பிரைன் பின்கர் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்த பிரிட்டன் அரசு சமீபத்தில் அனுமதியளித்தது.
இந்தத் தடுப்பு மருந்து தொடர்பாக பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்ஹெச்ஆர்ஏ) அளித்த அறிக்கையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தலாம். பாதுகாப்பானது, வீரியமாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த 82 வயதான பிரைன் பின்கர் என்பவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
இதுகுறித்து பைரைன் பின்கர் கூறும்போட்து, “ஆக்ஸ்போர்டால் கண்டறியப்பட்ட கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதைச் சிறப்பாகவும், பெருமையாகவும் உணர்கிறேன்” என்றார்.
முன்னதாக பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் போன்ற பல்வேறு கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு உலக நாடுகளில் கடந்த மாதமே செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.