Published : 02 Jan 2021 22:41 pm

Updated : 02 Jan 2021 22:42 pm

 

Published : 02 Jan 2021 10:41 PM
Last Updated : 02 Jan 2021 10:42 PM

ஈரானில் கரோனாவிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

iran-corona-update

ஈரானில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 6,045 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 12 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரானில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.


ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த வாரம் தொடங்கியது.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில், கரோனா முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தவறவிடாதீர்!


IranCoronaCorona virusOne minute newsஈரான்கரோனாகரோனா நோய் தொற்றுகரோனா வைரஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x