Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

2021 மார்ச் 31 வரை அமெரிக்காவில் ஹெச்-1 பி விசா மீதான தடை நீட்டிப்பு: இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்- 1பி விசா மீதான தடை, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த அறிவிப்பால் பெருமளவிலான இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. அதேபோல ஹெச்-1பி விசா மூலமாக பணியாளர்களை அனுப்பும் இந்திய ஐடி நிறுவனங் களுக்கும் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

ஹெச்-1பி விசாவை அந்நாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் வழங்க உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 22 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் ஹெச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய ஒரு மணி நேரம் முன்பாக புதிய உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார். விசா மீதான கட்டுப்பாடுகளில் எவ்வித மாற்றமுமின்றி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை ஹெச்-1பி விசா மூலமாக நியமிக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தபணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு ஹெச்-1பி விசாவில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய விசாவில் பணிபுரிவோர் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகுதான் கால நீட்டிப்பு குறித்து விண்ணப்பிக்க முடியும். பெருமளவிலான இந்திய தகவல்தொழில்நுட்பப் பணியாளர்களின் விசா புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்கர்கள் நலன்

கரோனா பரவலால் அமெரிக் காவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தேச நலனையும், மக்கள் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டி யிருப்பதால் ஹெச்-1பி விசா வழங்குவதில் முன்னர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டியுள்ளது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x