Published : 01 Jan 2021 01:47 PM
Last Updated : 01 Jan 2021 01:47 PM

ஆஸ்திரேலியாவில் பழங்குடிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய கீதத்தில் வரிகள் மாற்றம்

ஆஸ்திரேலியாவில் பழங்குடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டது பெரும் வரவேற்புக்கு உள்ளாகியுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் நாங்கள் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்ற தொடருக்கு பதிலாக, நாங்கள் அனைவரும் ஒன்று மற்றும் சுதந்திரமானவர்கள் என்ற வரி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ ஒரு நவீன தேசமாக ஆஸ்திரேலியா ஒப்பீட்டளவில் இளமையாக இருக்கிறது. இருந்தபோதிலும் ​​பல முதல் நாடுகளின் மக்களின் கதைகளைப் போலவே, நம் நாட்டின் கதையும் பழமையானது. அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்தில் பழங்குடிகளுக்காக ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

விக்டோரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் பல்வேறு தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x