Published : 26 Dec 2020 02:32 PM
Last Updated : 26 Dec 2020 02:32 PM

பிரான்ஸிலும் உருமாறிய கரோனா வைரஸால் ஒருவர் பாதிப்பு

பிரிட்டனிலிருந்து பரவும் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பிரான்ஸிலும் ஏற்பட்டுள்ளது. ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரான்ஸில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து வந்தவர்களைப் பரிசொதனை செய்ததில் ஒருவருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் குணமடைந்துவிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 7.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x