Published : 26 Oct 2015 09:25 AM
Last Updated : 26 Oct 2015 09:25 AM

இராக் போர் தவறுகளுக்காக வருந்துகிறேன்: பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கருத்து

இராக் போரின்போது நேரிட்ட சில தவறுகளுக்காக வருந்துகிறேன் என்று பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தெரிவித்துள்ளார்.

இராக்கில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டி கடந்த 2003-ம் ஆண்டில் அந்த நாட்டின் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் போர் தொடுத்து சதாம் உசேன் ஆட்சியை அகற்றின. ஆனால் அங்கு அணுஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் போரில் 4 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் 179 பிரிட்டிஷ் வீரர்களும் உயிரிழந்தனர். கோடிக் கணக்கில் பணம் விரயமானது.

இப் போர் குறித்து அப் போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவ காரம் குறித்து அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் சிறப்பு பேட்டி யளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சதாம் உசேன் ஆட்சியை அகற்றியதற்காக வருத்தப்பட வில்லை. ஆனால் அந்தப் போரின் போது நேரிட்ட சில தவறுகளுக்காக வருந்துகிறேன்.

இராக் போர் சரியா, தவறா என்பது அவரவர் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. அந்த நேரத்தில் சரி என்று தோன்றியதால் தான் போர் தொடுத்தோம்.

இராக் குறித்து அப்போது உளவுத் துறை அளித்த தகவல் கள் தவறானவை என்பது பின்னர் தெரியவந்தது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கு இராக் போரும் ஒரு காரணமாக அமைந்தது என்பதை நான் மறுக்கவில்லை. அதில் சில உண்மைகள் உள்ளன.

இராக், சிரியா, லிபியாவில் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றி ஜனநாயக ஆட்சியை ஏற் படுத்த முயற்சி செய்தோம். ஆனால் எங்கள் முயற்சி எந்த அள வுக்கு பலன் அளித்தது என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இராக் போர் குறித்து நீதிபதி ஜான் சில்காட் கமிஷன் விசாரித்து அறிக்கை தயார் செய்துள்ளது. அந்த அறிக்கை சில வாரங்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் டோனி பிளேர் இராக் போர் குறித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x