8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம்

8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம்
Updated on
1 min read

சீனாவிடம் 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவது தொடர்பாக பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் 4 நீர்மூழ்கி கப்பல்களை கராச்சி துறைமுகத்திலேயே கட்டித்தர சீனா திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ் தான் பாதுகாப்பு தளவாட உற் பத்தித் துறை அமைச்சர் ராணா தன்வீர் ஹுசைன் கூறும்போது, “8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள் ளோம். இதன்படி, கராச்சி துறை முகத்தில் 4 நீர்மூழ்கிகள் கட்டப் படும். இதற்கான தொழில் நுட்பத்தை சீனா வழங்கும். இதற்கான பயிற்சி மையமும் கராச்சியில் நிறுவப்படும். இதுபோல சீனாவில் 4 நீர்மூழ்கிகள் கட்டப்படும். ஒரே நேரத்தில் இரு நாடுகளிலும் கப்பல் கட்டுமானப் பணி தொடங்கும்” என்றார்.

எந்த வகை நீர்மூழ்கி என்ற விவரத்தை அமைச்சர் தெரிவிக்க வில்லை. ஆனால், யுவான் வகை-041 டீசல்-எலக்ட்ரிக் நீர் மூழ்கியாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, நீர்மூழ்கிகளை வாங்குவது தொடர்பாக பிரான்ஸ், ஜெர்மனியுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in