

ரஷ்யா இனிமேல் வல்லரசு நாடு இல்லை. அந்த நாட்டின் பொருளாதாரம் ஸ்பெயினைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1947-ம் ஆண்டில் அமெரிக் காவுக்கும் சோவியத் யூனியனுக் கும் இடையே பனிப்போர் மூண்டது. இரு நாடுகளும் நேரடியாக மோதிக் கொள்ளா விட்டாலும் சுமார் 44 ஆண்டு களுக்கும் மேலாக இந்த பனிப் போர் நீடித்தது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு பனிப் போர் படிப்படியாக மறைந்தது.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டாம் பனிப்போர் தொடங்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்தப் பின்னணியில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறிய தாவது:
பழைய சோவியத் யூனியன் பலம் வாய்ந்த நாடாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது இப்போதைய ரஷ்யா ஒன்றுமே இல்லை. அந்த நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து சறுக்கிக் கொண்டே செல்கிறது.
பொருளாதாரரீதியில் பட்டிய லிடும்போது அந்த நாடு தற்போது உலகின் 15-வது இடத்தில் உள்ளது. அந்த வகையில் ஸ்பெயினைவிட ரஷ்யா பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
உக்ரைன், சிரியா விவகாரங் களால் உலக அளவில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள் ளது. ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பெரும்பான்மையான நாடுகள் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்து விட்டன. இப்போதைய நிலையில் ஈரானும் சிரியா அதிபர் ஆசாத்தும்தான் ரஷ்யாவின் நெருங்கிய நண்பர்கள்.
சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் எல்லை தாண்டி பறந்த 2 ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்காவின் எப்.ஏ.-18 வகையைச் சேர்ந்த 4 போர் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பின. இனிமேல் ரஷ்யா வல்லரசு இல்லை, அந்த நாடு பொருளாதாரரீதியில் பின்தங்கிய பலவீனமான நாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.