Last Updated : 23 Oct, 2015 09:51 AM

 

Published : 23 Oct 2015 09:51 AM
Last Updated : 23 Oct 2015 09:51 AM

பாகிஸ்தானுக்கு போர் விமானம் விற்க அமெரிக்கா முடிவு

பாகிஸ்தானுக்கு 8 புதிய ரக எப் 16 போர் விமானங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதிபர் ஒபாமாவையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் இந்த போர் விமான விற்பனை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட் டுள்ள செய்தியில், பாகிஸ்தானுக்கு எப் 16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் கூடுதலாக விமானங் களை கேட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் எப் 16 நவீனபோர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஈராக், ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய போர் விமானங்கள் பலவற்றை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x