

ஜெர்மனி நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் தரன் (49) பதவியேற்றுக் கொண்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி பிளவுபட்டது. அதன்படி மேற்கு ஜெர்மனியின் தலைநகராக பான், கிழக்கு ஜெர்மனியின் தலைநகராக பெர்லின் விளங்கின. 45 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன.
இதில் பான் நகர மேயர் தேர்தல் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமா கரடிக் யூனியன்-சி.டி.யு. கட்சியைச் சேர்ந்த அசோக் தரன் 50.06 சதவீத வாக்குகளைப் அமோக வெற்றி பெற்றார். பான் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் அதிகாரப்பூர்வ மாக மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவர் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
அசோக் தரன் கோனிங்ஸ் வின்டர் நகர துணை மேயராகவும் கருவூலத் துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தந்தைக்கும் ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அவர் ஜெர்மனியின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.