Published : 15 Dec 2020 06:07 PM
Last Updated : 15 Dec 2020 06:07 PM

ஜோ பைடனுக்கு முதன்முதலாக வாழ்த்து தெரிவித்த புதின்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அரசு ஊடகம் தரப்பில், “அதிகாரபூர்வமான முடிவுக்காக நாங்கள் காத்திருந்தோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பினும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தீர்க்க இரு நாடுகளும் உதவ முடியும் என்று நம்புகிறோம் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதிகள் வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

ஜனவரி 20-ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x