ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகினர்.

இதுகுறித்து நன்கர்ஹர் மாகாண நிர்வாக அதிகாரி தரப்பில், “ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாகாணத்தில் சாலையோரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி சில அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்றும், 2021ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in