Last Updated : 22 Oct, 2015 05:33 PM

 

Published : 22 Oct 2015 05:33 PM
Last Updated : 22 Oct 2015 05:33 PM

உலகின் 5வது மிகப் பெரிய அணுஆயுத சக்தி நாடாகிறது பாகிஸ்தான்

2025-ஆம் ஆண்டில் அணுஆயுத கையிருப்பில் 5-வது இடத்தை பிடிக்கும் என்ற ஆய்வுத் தகவலை அமெரிக்காவை சேர்ந்த நியூக்ளியர் நோட்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வு தகவலின்படி, "கடந்த 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணு ஆயுதங்கள் இருந்தது. தற்போது 110 முதல் 130 வரை அணு ஆயுதங்கள் இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு 220 முதல் 250 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு பொறுத்தவரையில் அசாதியமான வளர்ச்சி, மேம்பாடு, நான்கு ஆப்ரேட்டிங் புளூட்டோனியம் உற்பத்தி உலைகள், யுரேனிய வளம் உள்ளிட்ட சில முக்கிய காரணங்களால் பாகிஸ்தானிடம் அடுத்த 10 அண்டுகளில் அணு ஆயுத சக்தி எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் அதன் வளர்ச்சி எந்த அளவில் இருக்கப் போகிறது என்பதை கணிக்க முடியாது.

மேலும் தரையிலிருந்து இலக்குகளைத் தாக்க வல்ல பாபர் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தக்கூடிய ராத் ஏவுகணைகளையும் தயாரிக்கும் பணிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அனைத்து வகை தகவலின்படியும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சேர்த்து வருவது உறுதியாகிறது. அணு ஆயுதங்களை நீர்மூழ்கி கப்பல்களில் அந்நாடு பயன்படுத்தக் கூடும்." என்று அணு ஆயுத நோட்புக் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அவர்களது ஆய்வுத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x