புளூட்டோவின் மிகப்பெரிய நிலவை படம் பிடித்தது நியூ ஹொரைசான் விண்கலம்

புளூட்டோவின் மிகப்பெரிய நிலவை படம் பிடித்தது நியூ ஹொரைசான் விண்கலம்
Updated on
1 min read

புளூட்டோவின் மிகப்பெரிய நிலவான சாரோனை நாசா அனுப்பிய நியூ ஹொரைசான் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதற்குமுன்பு இல்லாத வகையில் அதி நுட்பமாகவும், துல்லியமாகவும் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

புளூட்டோவுக்கு சாரோன் உட்பட 5 நிலவுகள் உள்ளன. இவற்றில் சாரோன் மிகப்பெரிய தாகும். இதன் புகைப்படத்தை நியூ ஹொரைசான் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ளது. நீலம், சிவப்பு, அகச்சிவப்பு நிற புகைப்படங்கள் சாரோனின் மேற்பரப்பை துல்லியமாகக் காட்டுகின்றன.

புளூட்டோவைப் போல வெவ்வேறு வித வண்ணங்களை சாரோன் கொண்டிருக்கவில்லை. வடதுருவப் பகுதியில் சிவப்பு நிறம் அதிகமாகக் காணப்படுகிறது.

சாரோனின் 1,214 கி.மீ. பரப்பை இந்த புகைப்படம் விவரிக்கிறது. 0.8 கி.மீ அளவுள்ள பகுதி வரை இந்த புகைப்படத்தில் துல்லிய மாகத் தெரிகிறது. மற்றொரு புகைப்படத்தில், பிளவுகள் கண வாய்கள் உள்ளிட்டவை பதிவாகி யுள்ளன.

“சாரோன் நிலவில் உட்பகுதி யில் உறைந்த கடல் இருப்பதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து வருகிறோம். சில இடங்களில் உள்ள பிளவுகள், நீருடன் லாவாவை மேற்பரப்புக் குத் தள்ளுவதற்கு உள்ள வாய்ப்பு களும் உண்டு. இவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என நியூ ஹொரைசான் குழு உறுப் பினர் பால் சென்க் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in