

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
என்றென்றும் ரஜினி
திரையில் மட்டுமே அரிதாரம் பூசும் நடிகர்!
அரிதாரம் எடுத்துவிட்டால் அரிதான மனிதர்!
@VIP_Offi
·
இந்த ரஜினியெல்லாம் எக்காரணம் கொண்டும் வெறுக்கவே முடியாது. எல்லோருக்கும் புடிச்ச ரஜினி.
க.சதாசிவம்
ரஜினிக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் நேர்மையான ஆன்மிக அரசியலுடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
Vijay
70 வயதிலும் 70 கோடிக்கும் மேலான மக்களை ஈர்க்கும் தலைவனே! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா... என்றுமே ராஜா நீ ரஜினி!
Vasantha
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினி சார். பல்லாண்டு நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன்
Suresh kumar
சாமானியனும் சாதனை நாயகன் ஆக முடியும் என நிரூபித்து தன்னம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்து கொண்டிருக்கும் அதிசியத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தக் காத்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.
Dr. V.Karnanprabhu
உழைப்பால் உயர்ந்தவர். அவர் நடிக்கும் படம் பிடிக்கும். ரஜினியின் நடிப்பு மிகவும் கவர்ந்தது.
RadhakrishnanD
தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, உருது மொழி பேசி வாழும் அனைத்து மத மக்களின் நல்லதொரு திருப்பமான நல்வாழ்க்கை மலர மக்களின் நம்பிக்கை, மக்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்... பிறந்த நாள் வாழ்த்துகள் கோடி கோடி!! பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்!!
முகமது பின் துக்ளக்
மக்கள் திலகம் என்றால் #MGR
நடிகர் திலகம் என்றால் #சிவாஜி
தலைவர் என்றால் #ரஜினி
சில அமைப்பு சில பேருக்கு மட்டும்தான் தானா அமையும்.
Sinraj Perumal
அரசியல் விமர்சனங்களைத் தவிர்த்து ரஜினி ஒரு நல்ல நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் எப்போதும் ரஜினியை ஒரு நடிகராகவே பார்க்க விரும்புகிறேன்.
siva
கூலி - கண்டக்டர் - நடிகர் - சூப்பர் ஸ்டார் - தலைவர் - அரசியல் தலைவர் ரஜினி.
கடும் உழைப்பின் அடையாளம் ரஜினி.
RamKumar
அரசியல்வாதி ரஜினிக்கும் நமக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நடிகர் ரஜினியை என்றென்றும் கொண்டாடுவோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார் ரஜினி.
Rajavel Nagarajan
உங்கள் அளவிற்கு என்னைத் திரையில் மகிழ்வித்த வேறொரு நடிகர் இதுவரை இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. திரை நடிகராக (மட்டும்) நீங்கள் இருக்கும்வரை, உங்களை ரசிக்கும் ரசிகனாக என்றும் இருப்போம். பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினி சார். நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகள்.