ஒப்பந்தகளின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும்: போரிஸ் ஜான்சன்

ஒப்பந்தகளின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும்: போரிஸ் ஜான்சன்
Updated on
1 min read

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “தற்சமயம் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியது ஒன்றுதான். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இல்லை. இதுவே எங்கள் அமைச்சரவையின் வலுவான பார்வையாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமுமின்றி பிரிட்டன் வெளியேறும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆஸ்திரேலிய, கனடாவை (வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல்) போல நாங்கள் விரைவில் தீர்வு காண இருக்கிறோம்” என்றார்.

இதன்படி வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாக முயன்றார். ஆனால், அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவைக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எம்.பி.க்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியதால் பிரிட்டன் சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in