Published : 11 Dec 2020 03:23 PM
Last Updated : 11 Dec 2020 03:23 PM

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொகுப்பாளருக்கு கரோனா தொற்று

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான எல்லேன் லீ டிஜெனிரெஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எல்லேன் லீ டிஜெனிரெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இருப்பினும் நான் நலமாக இருக்கிறேன். என்னைத் தொடர்பு கொண்டவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றுகிறேன். உங்களை விடுமுறைக்குப் பிறகு சந்திக்கிறேன். ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

— Ellen DeGeneres (@TheEllenShow) December 10, 2020

அமெரிக்காவைச் சேர்ந்த எல்லேன் நகைச்சுவை நடிகையாக தனது பயணத்தைத் தொடங்கியவர். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும், எழுத்தாளராகவும் வெற்றி பெற்றார். இவரது ’The Ellen DeGeneres Sho’w மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x