

அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தல் கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் நான்தான் வெற்றி பெற்றேன். ஆனாலும், அதிபர் தேர்தல் வெற்றி என்னிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. ஜோ பைடன் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளார்.
இதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு மிகவும் மோசமானது. நாம் இன்னும் இதில் (அமெரிக்க அதிபர் தேர்தல்) வெற்றி பெறுவோம். இந்த வெற்றி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.