சிங்கப்பூர் - மலேசியா கால்பந்து போட்டியில் நடுவருக்கு லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர் - மலேசியா கால்பந்து போட்டியில் நடுவருக்கு லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு சிறை
Updated on
1 min read

சிங்கப்பூரில் கால்பந்து போட்டி யின்போது, நடுவருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2012மே 22-ம் தேதி மலேசியாவில் கால்பந்து சூப்பர் லீக் போட்டி நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா வின் சரவாக் மாகாண அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிங்கப்பூர் லயன் 2 அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது, சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி செல்வராஜன் லெட்சுமண் (52), நடுவர் ஷோக்ரி நோர் (50), மலேசிய வீரர் தனசேகர் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்து வெற்றியை தனதாக்கிக் கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வந்தது. விசாரணையின் போது, ரூ.7.2 லட்சம் லஞ்சம் கொடுத்ததை செல்வராஜன் ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்தப் போட்டியை வைத்து சிங்கப்பூரைச் சேர்ந்த சூதாட்ட நிறுவனத்தில் செல்வ ராஜன் பந்தயம் கட்டியுள்ளார். இதையடுத்து செல்வராஜனுக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in