Published : 28 Nov 2020 04:34 PM
Last Updated : 28 Nov 2020 04:34 PM

உலகின் தனிமையான யானைக்கு கிடைத்த விடுதலை

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்டு வந்த கவான் யானை பலவருட தனிமைக்குப் பிறகு புதிய வாழ்கைக்கு செல்ல இருக்கிறது.

பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்தில் கடந்த பத்து வருடங்களாக தனியாக தவித்து வந்த கவான் யானை விடுதலை செய்யப்பட உள்ளது.

1985 ஆம் ஆண்டு கவான் யானை பாகிஸ்தானின் மர்காசர் சரணலாயத்துக்கு அழைத்து வரப்பட்டது. இலங்கையிடமிருந்து அன்பு பரிசாக அளிக்கப்பட்டதுதான் இந்த கவான் யானை. சரணலாயத்தில் தனியாக இருந்த கவான் யானைக்கு துணையாக இருந்த சாஹிலி என்ற யானை 1990 ஆம் ஆண்டு அழைத்து வரப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலவும் தட்ப வெப்ப நிலைக் காரணமாக சாஹிலி யானை 2012 ஆண்டு மரணமடைந்தது. இதனைத் தொடர்ந்து கவான் யானை தனிமையில் இருந்து வந்தது. தனிமையின் காரணமாக கவானுக்கு அடிக்கடி மதமும் பிடித்து வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள விலங்கு நல ஆரவலர்கள் கவானை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சிக்கர செய்தியாக கவான் விடுதலை செய்யப்பட உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவுக்கு கவான் அனுப்பப்பட உள்ளது.

இச்செய்தியை விலங்கு நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் மர்காசர் சரணாலயம் கவானின் பிரிவு எங்களுக்கு நிச்சயம் வருத்தத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x