Published : 26 Nov 2020 11:46 AM
Last Updated : 26 Nov 2020 11:46 AM

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,439 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் 2,62,080 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2, 439 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கரோனாவுக்கு 2,62,080 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் அமெரிக்காவில் 1.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ், நியூயார்க், கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியதுபோன்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x