Published : 25 Nov 2020 01:34 PM
Last Updated : 25 Nov 2020 01:34 PM

பிரான்ஸ்: ஜனவரியில் உணவு விடுதிகள் திறக்கப்படும்

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தொலைக்காட்சியில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறும்போது, “ஜனவரி மாதம் புதிய முடிவுகள் எடுக்கப்படும். தினசரி கரோனா தொற்றுக 5,000க்கும் கீழே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் ஜனவரி மாதம் உணவு விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் ஜனவரி மாதம் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x