

தென்ஆப்பிரிக்காவில் புதன் கிழமை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்க தேசிய அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 400 ஆகும். இதில் 200 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 200 உறுப்பினர்கள் 9 பிராந்தியங்களின் விகிதாச்சார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இருப்பினும் இந்த பொதுத் தேர்தலிலும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -பி.டி.ஐ.