

வெளிநாடுவாழ் இந்திய சகோதரர் களான ஜி.பி.இந்துஜா மற்றும் எஸ்.பி.இந்துஜா ஆகியோர் பிரிட்டனின் அதிகாரம் மிக்க ஆசியர்கள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளனர்.
லண்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஜிஜி2 லீடர்ஷிப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 101 முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டனின் வர்த்தகத் துறை அமைச்சர் சாஜித் ஜாவித் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
உறுதிமிக்க இளைஞரான ஜாவித், கடந்த 2010-ம் ஆண்டு அரசியலில் சேர்ந்தார். அப்போதி லிருந்து அவரது புகழ் வேகமாக வளரத் தொடங்கியது என ஜிஜி2 புகழாரம் சூட்டி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பிரீத்தி படேல் 3-ம் இடத்தையும், ஸ்டீல் ஜாம்பவான் லட்சுமி மிட்டல் 4-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் 23 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில், மலாலா யூசுப்சாய் (18) 10-ம் இடத்தைப் பிடித்துள்ளார். இளம் வயதில் இடம் பிடித்தவர் என்ற பெயரும் இவருக்குக் கிடைத்துள்ளது.